தனது வீட்டின் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார், அவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டிய நிலையில், சவுக்கு சங்கர் புகாரின் பின்னணி இதுதான் என்று செல்வப் பெருந்தகை பதிலளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுமார் 5,000 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைராக நியமிக்கப்பட்ட ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு அப்போதே, செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்து அவதூறு வழக்கு தொடர்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீரை ஊற்றி தாக்குதல் நடத்தனது வீட்டின் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார், அவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். இதற்கு, மறுப்பு தெரிவித்துள்ள செல்வப் பெருந்தகை, சவுக்கு சங்கர் புகாரின் பின்னணி இதுதான் என்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை , “சவுக்கு சங்கர் தனக்கு வேண்டியவரை காங்கிரஸ் மாநில தலைவராக்க, தன் மீது வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார்” என்று கூறினார்.
மேலும், சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறார் என்றும் தன் மீது புகார் தெரிவிப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, தன் மீது விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.