/indian-express-tamil/media/media_files/5YpPNRrZ8VjZIMLk0z62.jpg)
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி விஜய்வசந்த்
த.இ.தாகூர் - குமரி மாவட்டம்.
kanniyakumari | Selvaperunthagai | Vijay Vasanth:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பரசேரி பகுதியில் கனரக வாகனம் திருவனந்தபுரம் மெயின் சாலையில் வந்தது. அப்போது, வாகனத்தின் பின்புற கதவு திடீரென திறந்துள்ளது. அந்த கதவு, சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மீது மோதியதில், அந்த இரண்டு நபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, விபத்து நடந்த சாலையில், மார்த்தாண்டம் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்லபிராசத், குமரி தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் எம்.எல்.ஏ உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்களது கார்களில் சென்றுள்ளனர். அப்போது விபத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திய அவர்கள், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அவர்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.