அமித் ஷாவை சந்தித்து பேசினேன்: கோவையில் செங்கோட்டையன் பேட்டி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக்களை முன் வைத்ததாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக்களை முன் வைத்ததாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Sengottaiyan Delhi BJP ADMK Amit Shah Nirmala Sitharaman Tamil News

அரசியலில் உள்ளவர்கள் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், இது வரவேற்கத்தக்கது என செங்கோட்டையன் தெரிவித்தார்.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக்களை முன் வைத்ததாகவும், தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன் எனவும் கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Advertisment

பரபரப்பான அரசியல் சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு திரும்பினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். 

எல்லாரும் ஒன்றிணை வேண்டும் என்று நோக்கத்தோடும், இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் கருத்துக்களை முன் வைத்ததாகவும், இந்தக் கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், அரசியலில் உள்ளவர்கள் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்களுக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார். 

மேலும் ரயில்வே துறை அமைச்சரின் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன் கூட்டியே சென்னை செல்வதால் மக்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்ததாகவும், அதற்கு உடனடியாக பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியதாகவும், இது போன்ற மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார் 

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

K A Sengottaiyan Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: