பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர். மேலும், கொலீஜியம் அளித்த பரிந்துரையை திரும்பப் பெறக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
அண்மையில், விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அப்போதே இதற்கு உடனடியாக எதிர்ப்புகள் கிளம்பின.
பா.ஜ.க-வின் மகளிர் அணியின் தேசிய செயலாளராக இருந்தவர் விக்டோரியா கெளரி. பா.ஜ.க நிர்வாகியாக, வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பேச்சுகள் யூடியூப்பில் இருக்கின்றன; இப்படி வெறுப்பை தூண்டக் கூடிய நபரை நீதிபதியாக நியமிக்க கூடாது என எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், பா.ஜ.க வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பா.ஜ.க-வின் விக்டோரியா கவுரியை நியமிக்க சென்னை நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்கும் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
விக்டோரியா கெளரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மனுவில், மூத்த வழக்கறிஞர்களான என்.ஜி.ஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ், டி. மோகன், எஸ். தேவிகா, சுதா ராமலிங்கம், நந்தினி, டி. கீதா, உள்ளிட்ட 21 மூத்த வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்ட மனுவில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்துவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும் தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆகையால் விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு அவர் தகுதியற்றவர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”