காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்ககூடிய தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார். 93 வயதான குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
தமிழ்நாடு அரசின் தகைசால் விருதினை பெற்ற குமரி அனந்தன் இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மீதான ஈடுபாடு காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலம் சரியில்லாமல் குமரி அனந்தன் குடியாத்தம் அருகே அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தரரஜன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தந்தையின் மறைவுக்கு தமிழிசை எக்ஸ் தளத்தில் இரங்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.