ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியது தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தை ஏற்று சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயரை வழக்கில் இருந்து நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசியபோது, ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் சென்னையில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் தெலுங்கு மொழி பேசுபவர்களாய் இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது எனவும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.
மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் மற்றும் அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது எனவும் வில்சன் வாதிட்டார்.
ஒரு காவல் ஆணையர் என்பவர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து முறையான காவல் கண்காணிப்புப் பணி செய்யப்படும் என்று காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்திருப்பதாகவும், எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும் வழக்கறிஞர் வில்சன் எடுத்துரைத்தார்.
மூத்த வழக்கறிஞர் வில்சனின் வாதங்களை ஏற்று, மாநில மனித உரிமைகள் ஆணையமானது, இந்த வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருணின் பெயரை நீக்கியது. மேலும் வழக்கறிஞர் வில்சன் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து மாநகர காவல் ஆணையருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
'சில ரவுடிகள் தெலுங்கு மொழியில் பேசுவதால் அவர்கள் மொழியில் பேசுவது தவறு இல்லை': மனித உரிமை ஆணையத்தில் கமிஷனர் அருண் தரப்பு வாதம்
ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம், அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது; சென்னை காவல் ஆணையர் அருண் தரப்பில் ஆஜரான வில்சன் வாதம்
Follow Us
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியது தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தை ஏற்று சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயரை வழக்கில் இருந்து நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசியபோது, ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் சென்னையில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் தெலுங்கு மொழி பேசுபவர்களாய் இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது எனவும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.
மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் மற்றும் அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது எனவும் வில்சன் வாதிட்டார்.
ஒரு காவல் ஆணையர் என்பவர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து முறையான காவல் கண்காணிப்புப் பணி செய்யப்படும் என்று காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்திருப்பதாகவும், எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும் வழக்கறிஞர் வில்சன் எடுத்துரைத்தார்.
மூத்த வழக்கறிஞர் வில்சனின் வாதங்களை ஏற்று, மாநில மனித உரிமைகள் ஆணையமானது, இந்த வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருணின் பெயரை நீக்கியது. மேலும் வழக்கறிஞர் வில்சன் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து மாநகர காவல் ஆணையருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.