Advertisment

செஞ்சி ராமச்சந்திரனுக்கு அ.தி.மு.க-வில் அவமரியாதை? சமூக வலைதளத்தில் காரசார மோதல்

அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பத்தொடு பதினொன்றாக அமரவைக்கப்பட்டு செஞ்சி ராமச்சந்திரன் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் காரசார மோதல் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
lll

செஞ்சி ராமச்சந்திரனுக்கு அ.தி.மு.க-வில் அவமரியாதை? சமூக வலைதளத்தில் காரசார மோதல்

அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பத்தொடு பதினொன்றாக அமரவைக்கப்பட்டு செஞ்சி ராமச்சந்திரன் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் காரசார மோதல் நடைபெற்று வருகிறது.

Advertisment

அண்மையில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போது அ.தி.மு.க-வில் உள்ள அரசியல் அனுபவமிக்க செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்களுடன் பங்கேற்றார். இதில், அரசியல் அனுபவமிக்க மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் இப்படி பத்தோடு பதினொன்றாக அமரவைக்கப்படுவதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி காரசார மோதல் நடைபெற்று வருகிறது.

செஞ்சி ராமச்சந்திரன் ஆரம்பத்தில் தி.மு.க-வில் இருந்தவர். பின்னர், வைகோ தலைமையில் ம.தி.மு.க-வில் செயல்பட்டார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வில் செயல்பட்டு வருகிறார்.

https://www.facebook.com/photo/?fbid=1718953081936480&set=a.122030024962135

இந்த சூழ்நிலையில்தான், அ.தி.மு.க-வில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற விவாதமும் மோதலும் நடைபெற்று வருகிறது. 

முகநூல் பக்கத்தில் தகடூர் சம்பத் என்பவரின் பதிவில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் செஞ்சி ராமச்சந்திரன் அமர்ந்திருக்கும் படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுருப்பதாவது:   “அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பத்தொடு பதினொன்றாக அமர்ந்திருக்கும் இவர் செஞ்சி.இராமச்சந்திரன். நீல வட்டத்தில் இருப்பவர்.

1970 முதல் 1990 காலம் வரையில் அன்றைய தென்னாற்(ர்)காடு மாவட்டத்தில் தி.மு.கழகத்தின் தளகர்த்தராக விளங்கியவர். தென்னாற்(ர்)காடு மாவட்டச் செயலாளராக கொலு வீற்றிருந்தவர். ம.தி.மு.க.விற்கு சென்றதலிருந்து தடம் மாறி இன்று அ.தி.மு.க.வில் பழனிசாமிக்குக் கீழே அமர்ந்திருக்கிறார். 

தி.மு. கழகத்தின் செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லையென்றால் 'அரசியலை துறந்து' வீட்டில் இருக்கலாம் அல்லது அவரவர் திறமைக்கேற்ப ஏதாவது தொழில் செய்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பதவி அல்லது ஏதாவது நோக்கத்திற்காக இப்படி தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வது வருத்தத்திற்குரியது.

இந்த முகநூல் பதிவில் படிக்கலாம்: செஞ்சி ராமச்சந்திரனுக்கு அ.தி.மு.க-வில் அவமரியாதை? சமூக வலைதளத்தில் காரசார மோதல்

நாவலர் மீதும் எனக்கு இத்தகைய வருத்தம் உண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்களின் தலைமையில் ( கலைஞர் தலைமையில் இருந்ததை ஒதுக்கிவிடுவோம். வேண்டா வெறுப்பு என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.) பணியாற்றிவிட்டு எப்படி இவரால் இராமச்சந்திரன், செயா போன்றோரின் தலைமையில் இருக்க முடிந்தது என்ற வருத்த வினா எனக்கு எப்போதும் உண்டு. அத்தகையோரில் இந்த செஞ்சி.இராமச்சந்திரனும் ஒருவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ராஜசேகரன் என்பவர் கம்மெண்ட் செய்கையில், “படித்தவர்...பண்பாளர். நெடுஞ்செழியனை புறந்தள்ளி கருணாநிதி தலைமைக்கு வந்த்தை உங்களால் சீரணித்துக்கொள்ள முடியுமென்றால்... செஞ்சி ராமச்சந்திரனைப்பற்றி உங்களுக்கு கவலை ஏன்.?

கருணாநிதி காலத்து அரசியல்வாதிகள் பொன்முடி நேரு பெரியசாமி போன்றோர்உதயநிதிக்கு கீழே நிற்பது உங்களுக்கு ஏற்புடையதோ.

எம்.ஜி.ஆரால் முதலாளி என அழைக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர் இன்று உதயநிதி முன் கைகட்டி நிற்பது இனிக்கிறதோ?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு இளங்கோவன் ராஜாங்கம் என்பவர் பதிலளித்து கம்மெண்ட் செய்திருப்பதாவது: “படித்தவரெல்லாம் ஆளுமைகளல்ல என்பதற்கு நாவலரே நல்ல உதாரணம்.. நாவலர் நெடுஞ்செழியன் தலைமைக்கு திமுக போயிருந்தால் திராவிட கொள்கை என்றோ நீர்த்துப்போய் இன்றைய தினத்தில் பா.ஜ.க தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்...

நமக்குத் தேவை சனாதன வர்ணாச்சிரம பார்ப்பனீய எதிர்ப்பு... அது வருவது உதயநிதியிடமிருந்தா இன்பநிதியிடமிருந்தா என்பது இரண்டாம் பட்சமே..” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

மு. அருள்செல்வன் என்ற முகநூல் பதிவர், “அதென்ன மதிமுகவுக்கு சென்றதிலிருந்து தடம் மாறினாரா? வைகோ மீதான வன்மத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொட்டுவதற்கு எதற்கு பெரியார் முகமூடி?” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

வெங்கடேசன் வெங்கி: “இதே கேள்வியை திமுகவிலுள்ளவர்களை நோக்கி பாயுமா ?

ஸ்டாலினுக்கு கீழேயும் உதயநிதிக்கு கீழேயும் இயங்குகவர்கள் குறித்து உங்கள் கருத்தென்ன” என்று கேட்டு கம்மெண்ட் செய்துள்ளார்.

இவருக்கு பதிலளித்துள்ள புகழேந்தி கே.எம்.எஸ்: “மதிமுக வந்த பின் தான் மத்திய இனை அமைச்சராகி கழகத்துக்கு பயனில்லாமல் தன் குடும்பத்துக்கு செல்வம் ஈட்டி மதிப்பிழந்தார்.

இது தான் யதார்த்தம்.” என்று செஞ்சி ராமச்சந்திரனை விமர்சனம் செய்துள்ளார்.

ராஜசேகரன் என்பவர் இளங்கோவன் ராஜாங்கத்திற்கு அளித்துள்ள கம்மெண்ட் பதிவில்: “தனது திரைப்படங்களில் கழகத்தின் கருத்துக்களை விதைத்தவர் எம்ஜிஆர்.

Founder அண்ணாதான். ஆனால் அதற்கு முன்னோடிகள்...வேறு.

தி.மு.க என ஒரு கட்சியை உருவாக முதன்முதலில் கூட்டம்போட்டது... கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் உள்ள ஒரு பங்களாவில்..(கமலகாசனின் மகா நதி சினிமாவில் வருமே அந்த பங்களா)

தி.மு.க உருவாக ஐம்பெரும் தலைவர்களே ஆரம்ப கட்ட தலைவர்கள். அதில் கருணாநிதி கிடையாது.

தி.மு.க உருவான போது சென்னை ராபின்சன் பார்க்கில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கிடையாது. அப்போதெல்லாம் கருணாநிதி பெரியாரின் குடியரசு இதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா இல்லையா என்பது கழக வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கணக்கு கேட்டதால் கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியதும் வரலாறுதான்.

இந்திராவை எதிர்த்தார்... ஆட்சியை இழந்தார்... பின்னர் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என கெஞ்சியதும் கருணாநிதிதான்.

தனது அழுத்தத்தால் எம்ஜிஆரின்ஆட்சியை கட்சியை காவு வாங்கினாலும்.. எம்.ஜி.ஆர் மீண்டு வந்தார். இதுவும் வரலாறுதான்.

நீங்க சொல்ற மாதிரி கருணாநிதியால் Political Do gooder image of Karunanidhi என்பது அன்றும் அவரால் வாங்க முடியவில்லை... இன்றும்இல்லை... இன்றுவரை திமுக அந்த நிலையை அடைய கலைஞர் பெயரில்என்னென்னவோ செய்து பார்க்கிறது அது நடக்கவில்லை

மாறாக ஊழலே செய்தாலும் கூட எம்.ஜிஆர்.. ஜெயலலிதா நல்லவர்கள்... ஆளுமை மிக்கவர்கள் என்ற இமேஜை யாராலும் உடைக்க முடியவில்ரலை

அந்த இமேஜில்தான் ஓ.பி.எஸ்... இ.பி.எஸ் எல்லாம் இன்றுவரை மஞ்சள் குளிக்கிறார்கள்.

இம்முறை திமுக ஆட்சிக்கு வந்து நிர்வாகத்தை திறம்பட செய்தாலும்... கருணாநிதியின்ஊழல் இமேஜ்... இன்றுவரை திமுகவை பாதித்துக் கொண்டுதான்இருக்கிறது.

பார்ப்போம் ஸ்டாலின்.. உதயநிதி என்ற தொடர்ச்சியாவது ஊழல் கறையை துடைத்து எறியுமாவென.

பேனாக்களும்...நூலகங்களும் ..ஊழல் கறையை துடைக்காது.

ஜனரஞ்சகமான அம்மா உணவகம்..மருந்தகம்.. இலவச சைக்கிள் கணினி தாலிக்கு தங்கம்..போன்ற திட்டங்கள்தான் மக்கள் மனிதில் நினைக்கும்

தற்போதைய மகளிர் உரிமைத் தொகை 1000 ரூ, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களுக்குமாத உதவித் தொகை போன்ற திட்டங்களின் தொடர்ச்சியும்..இதுபோன்ற புதிய திட்டங்களுமே பழைய ஊழல் கறையை துடைத்து இன்றைய ஆட்சியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும். திமுக வளரும்.

குறிப்பாக இளைஞர்களுக்கான சிறப்பு உதவி திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.

அரசர் அய்யா ராஜசேகரன் என்பவருக்கு அளித்துள்ள பதில் கம்மெண்ட்டில்: “அரசியலில் நீங்கள் சொல்லியிருக்கும் தகுதி அதிகமாகவே தேவைப்படும்! இந்த நிலைமையில் யாருக்காகவும் மனம் இளகி என்ன ஆகப் போகிறது? திறமை உள்ளது மட்டுமே தொடர்ந்து ஜீவிக்கும்!” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment