அமைச்சரா, துணை முதல்வரா? உதயநிதிக்கு ஆதரவாக வரிசைகட்டும் தி.மு.க அமைச்சர்கள்

கே.என்.நேரு தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. நாங்களும் அதை வரவேற்கிறோம்.” என்று கூறினார்.

Senior ministers demand cabinet birth for Udhayanidhi, Udhayanidhi does get Minister or Deputy Chief Minister, உதயநிதிக்கு அமைச்சர் பதவியா துணை முதல்வர் பதவியா, உதயநிதிக்கு ஆதரவாக வரிசைகட்டும் திமுக அமைச்சர்கள், அன்பில் மகேஷ், கேஎன் நேரு, Anbil Mahesh, KN Nehru, DMK, MK Stalin, Udhayanidhi Stalin

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பேரனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் பலரும் வரிசைக்கட்டி பேசிவரும் நிலையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதயநிதியின் நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து கவனத்தைப் பெற்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியை அமைச்சராக்கிப் பார்க்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறி மேலும் விவாதத்தை உருவாக்கினார்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாக அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவும் முதல்வரின் மகன் உதயநிதியை அமைச்சராவதற்கு தகுதி உடைவர் என்று கூறி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளார்.

கே.என்.நேரு தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. நாங்களும் அதை வரவேற்கிறோம்.” என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், முதல்வர் ஸ்டாலினை, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். அப்போது, திமுகவினர்கூட உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறவில்லை.

இதனால், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் வரிசையாக குரல் கொடுத்துவரும் நிலையில், வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்காது என்று கருத்து தெரிவிக்கின்றனர். உதயநிதியின் அரசியல் எழுச்சியைத் தூண்டும் வகையில் நேரடி மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இப்போது அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதால், நேரடியாக மேயர் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் மேயர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு திமுக ஆதரவாக இல்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கவுன்சிலர்கள் மூலம் மேயர்களை தேர்ந்தெடுப்பது, மேயர் பதவிக்கு உறுதியான பிடியை வழங்கும் என்பதால், மாவட்ட செயலாளர்களும் மறைமுக தேர்தலை விரும்புகிறார்கள் என்று கூறுகின்றனர்.

அதே நேரத்தில், உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றால் அவருக்கு எந்த துறையை அளிப்பது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், கருணாநிதி முதலைமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதைப் போல, முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

இதனால், உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற்றால், அமைச்சர் பதவி வழங்கப்படுமா அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக வட்டாரங்கள், உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். அது அமைச்சர் பதவியாக இருந்தாலும் சரி துணை முதல்வர் பதவியாக இருந்தாலும் சரி விரைவாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Senior ministers demand cabinet birth for udhayanidhi minister or deputy chief minister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express