New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a26.jpg)
Tamil News Live Updates : பள்ளிக்கல்வி துறை முக்கிய உத்தரவு!
Tamil News Live Updates : பள்ளிக்கல்வி துறை முக்கிய உத்தரவு!
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் குறித்து தவறான வாசகம் நீக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின், பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்து மதம், முஸ்லிம் மதம் குறித்த தலைப்பில், சுதந்திரத்திற்கு முன்பு ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை - அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக ஆர்எஸ்எஸ் செயலாளர் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான வாசகத்தை நீக்கவும், பாட புத்தகத்தை வினியோகிக்க தடை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வாசகங்கள் நீக்கப்படும் எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கக்கப்படும் எனவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசின் பதிலை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் - காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.