Advertisment

ஹார்ட் டிஸ்க்குகளை மாற்றியது இ.டி... பென் டிரைவில் கோப்புகள் மாற்றம் - ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறை ஹார்ட் டிஸ்க்குகளை மாற்றிவிட்டது என்றும் பென் டிரைவில் கோப்புகளை மாற்றியது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
SenthilBalaji

செந்தில்பாலாஜி தரப்பு இ.டி மீது குற்றச்சாட்டு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறை ஹார்ட் டிஸ்க்குகளை மாற்றிவிட்டது என்றும் பென் டிரைவில் கோப்புகளை மாற்றியது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ED swapped hard disks, altered files in pen drive: Ex-Tamil Nadu minister Senthil Balaji in court

செந்தில் பாலாஜி, 2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீதான வழக்கு, பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்து வருகிறது.

தனக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்க இயக்குனரகம் சிதைத்துள்ளதாக தமிழக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பின்னரும், தான் வகித்த அமைச்சரவைப் பதவியை ராஜினாமா செய்த மறுநாள், புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணையின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செந்தில்பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமா சுந்தரம், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷிடம், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாக வாதிட்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த ஆதாரங்களில் கூறப்படும் முரண்பாடுகளை மேற்கோள்காட்டி, பறிமுதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெச்பி பிராண்டட் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சீகேட் ஹார்ட் டிஸ்கிற்கு தரவுகளை மாற்றுவது, கைப்பற்றப்பட்ட பொருட்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவது போன்ற நிகழ்வுகளை வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் குறிப்பிட்டார்.

“பறிமுதல் மகஜரில் பதிவு செய்யப்பட்ட பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களின் பிராண்ட் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை முற்றிலும் வேறுபட்டவை” என்று வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் கூறினார்.

இ.டி சார்ந்திருக்கும் ஆதாரங்கள் ஏஜென்சியால் புனையப்பட்டவை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார். மேலும், பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள கோப்புகள் 2015-ல் உருவாக்கப்பட்டதாகவும் ஆனால், 2022-ல் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆரம்பத்தில், பென் டிரைவில் 284 கோப்புகள்/ஃபோல்டர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை பின்னர் 472-ஆக மாற்றப்பட்டது. தடயவியல் பகுப்பாய்வு மூலம், கைப்பற்றப்பட்ட பிறகு, சில கோப்புகள் நீக்கப்பட்டு புதிய கோப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் வாதிட்டார். முதன்மை ஆதாரம் மற்றும் நீட்டிப்பு மூலம் டிஜிட்டல் ஆதாரத்தின் அடிப்படையிலான அனைத்து ஆதாரங்களும் சந்தேகத்திற்குரியதாக கருதப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.

ஜாமீன் கோரி வாதிட்ட வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், தற்போது விசாரணை முடிந்து, செந்தில்பாலாஜி அமைச்சராகப் பதவி வகிக்காத நிலையில், அவர் சாட்சிகளை பாதிக்கக்கூடும் என்று அரசுத் தரப்பு கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை என்றார்.

இ.டி எதிர் வாதங்களை முன்வைக்க பட்டியலிட்டு இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த பாலாஜிக்கு எதிரான வழக்கு, பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் இ.டி விசாரணையில் இருந்து வந்தது. வேலைவாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக மாநில காவல்துறை பதிவு செய்த பல வழக்குகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. செந்தில்பாலாஜி ஜூன் 2023-ல் கைது செய்யப்பட்டதிலிருந்து, அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment