மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் இன்று (ஜுன் 14) அதிகாலை கைது செய்தனர். இது தி.மு.க, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது சகோதரர் வீடு, கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத் துறை கைது செய்தால், மேற்கொள்ளப்படும் நடைமுறை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.
- சட்டப்பேரவை செயலகம் மூலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.
- சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால் உடனடியாக சட்டப்பேரவையில் தெரியப்படுத்தப்படும். 4. சட்டப்பேரவை நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“