Advertisment

உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு: செந்தில் பாலாஜி கைதுக்கு காரணமான வழக்கு பின்னணி

அமலாகத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை நாம் தெரிந்திகொள்ள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செந்தில் பாலாஜி கைதுக்கு காரணமான வழக்கு பின்னணி

செந்தில் பாலாஜி கைதுக்கு காரணமான வழக்கு பின்னணி

அமலாகத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை நாம் தெரிந்திகொள்ள வேண்டும்.

Advertisment

அதிமுக ஆட்சியில், 2011 முதல் 2015 வரை  செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். 2014ம் ஆண்டு போக்குவரத்து துறையில்  ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்களை  பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு  பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2005ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலஜியின் பெயர் இல்லை. இந்நிலையில் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சேர்க்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து , அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மைத்துனர் கார்த்திக் மற்றும் 40-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு அளித்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் மனிதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால், செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை  நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாகத்துறை , விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.  இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த சம்மனை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு என 3 மேல் முறையீடு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன.  விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்வதற்கு எதிராக அமலாக்கத்துறையும், பழைய வழக்குகளை மீண்டும்  விசாரிக்க வேண்டும் என்பதை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை  நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மே 16ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து அறிக்கை அளிக்க தமிழகத்தின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து  செய்தது செல்லாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  வழக்கு விசாரணையைப் பொருத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment