அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisment
செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை (புதன்கிழமை) 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது.
20 மணி நேர விசாரணைக்குப் பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது, அதனையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் அறிந்து அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, எ.வ. வேலு உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க.வின் துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி செந்தில் பாலாஜியின் கைதையும், அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
அதில், கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கதறியது தான் திராவி மாடல்.
செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல் அறிவாயத்தின் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை.ஆனால், இப்போது திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது, என்று நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்
திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான்.
"அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க…" என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நாராயணன் திருப்பதி.
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 14, 2023
— Narayanan Thirupathy (@narayanantbjp) June 14, 2023
மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நாரயணன் அதில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது செந்தில் பாலாஜியின் கடமை. வெட்கமாக இல்லை.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சாதரண மக்களிடம் லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒரு நபருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆதரவா?
தலைகுனிய வேண்டிய சூழ்நிலையிலே தமிழகம் இருக்கிறது. முதலமைச்சர் சட்டத்திற்குட்பட்டு, உங்களுடைய கட்சியினரை நடக்க வையுங்கள். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியுங்கள். அதுதான் திமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லது என்று, நாரயணன் திருப்பதி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“