முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யபட்டார். நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வுத்துறை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
எனினும் செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு 22 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது. மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் ஜாமீன் கோரி பலமுறை விண்ணபித்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் அவர் அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, 2-வது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இதுவரை செந்தில் பாலாஜிக்கு 22 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பிப்ரவரி 14, 15, 21 தேதிகளில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று(பிப்.28) வழங்கப்பட்டது. அதில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர், 8 மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“