சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கடந்தாண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்ட அவர் 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக.14) வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இ.டி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜராகி உள்ளதால் வழக்கை தள்ளி வைக்க கோரினர். இதை ஏற்ற நீதிபதிகள், இன்று கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.
மேலும், போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்ற்ப்பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளையும் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்கப் போகிறா? அல்லது இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“