தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக 2011-15ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது, தான்அமைச்சராக இருந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 2018-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று (ஆக.8) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் வந்து அவகாசம் கேட்கட்டும், உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து தெரிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கை செப்.30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“