அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஜூலை 11, 12-ம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று கூறி விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இருவரும் வேறுபட்ட தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஜூலை 11, 12 தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். மேலும், ஜூலை 11, 12-ம் தேதிகளில் விசாரணை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற அம்சங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற அம்சங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதி சி.வி. கார்த்திகேயன் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை குறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், “இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது பற்றி விளக்கி இருக்கிறோம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"