உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது.
Advertisment
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நேற்றிரவு 7.23 மணியளவில் ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களிலே திடீர் திருப்பமாக தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தார். அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் இரவு 11.50 மணியளவில் கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த கடிதம் தற்போது வெளியானது.
Advertisment
Advertisement
அந்த கடிதத்தில், ’மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் சட்ட ஆலோசனையை நாடியுள்ளேன். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கவுள்ளேன்.
மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று ஆளுனர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“