/tamil-ie/media/media_files/uploads/2017/09/Senthil-balaji-1.jpg)
“வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், “வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ஆம் தேதிக்கு (புதன்கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, 2014-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தேவசகாயம் என்பவர் 2015-ம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் 2016-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனர். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜூன் 13, 2022-ல் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுநாள், ஜூன் 14-ல் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.