அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
Advertisment
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்தது.
அப்போது கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளின் காரையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.
மேலும், செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வருமான வரி சோதனையின் போது தாக்கப்பட்ட அதிகாரி காயத்ரி முன்னாள் தடகள வீராங்கனை என்பது தெரியவந்துள்ளது.
அரியலூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த காயத்ரி பள்ளி படிக்கும் போதிலிருந்து, தடகளத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார். 16 வயதினருக்கான தடை தாண்டுதலில் தங்கம். 2016 அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 100 மீட்டர் தடை தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார்.
மேலும் 2008 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வாங்கியுள்ளார்.
இப்போது காயத்ரி வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil