அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisment
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்தது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளின் காரையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.
Advertisment
Advertisements
இதனால் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் கரூர் நகர காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் தஞ்சமடைந்தனர்.
மேலும், நேற்று காலை கரூர் துணை மேயர் தாரணி வீட்டில் சோதனை நடத்த முற்பட்டபோது, திமுகவினர் வருமான வரித்துறையினரை வீட்டிற்குள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சோதனை நடத்த சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததால், கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் கரூர் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil