அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கரூா் மாவட்ட ஆட்சியரை தகாத வாா்த்தைகளால் பேசியதாக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை அமைச்சர் இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே மாவட்ட ஆட்சியரை சந்தித்ததாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதிட்டார்.
மேலும், எந்த ஒரு மிரட்டல் விடுக்கவில்லை என்றும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து, நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட வழக்கு என்றும் வாதிட்டார்.
நளினி, முருகன் வாட்ஸ்அப்பில் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை? ஐகோர்ட் கேள்வி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வந்ததாகவும், கலெக்டர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil