செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தனித் தனியாக 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பிரிவின் துணை கமிஷ்னராக இருந்த நாகஜோதி விசாரணை மேற்கொண்டுள்ளார். சைலேந்திர பாபு டிஜிபியாக இருந்தபோது செந்தில் பாலாஜி வழக்குகள் குறித்து தலைமை செயலகத்தில் கூட்டம் ஒன்று நடந்ததாக கூறப்படுகிறது.
அதில் செந்தில் பாலாஜி வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றதால் எதுவும் செய்ய முடியாது என்று நாகாஜோதி கராராக கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் வழக்கு விசாரணையில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதம் வரை நாகாஜோதி விடுமுறையில் செல்ல அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்குகளை செப்.30-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நாகஜோதி இரவோடு இரவாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மாநில குற்ற ஆவணக் காப்பக எஸ்.பி- ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் நிலை ஒன்றில் நாகாஜோதி இருந்தார். இந்த இடத்திற்கு துணை கமிஷ்னர் நிலை மூன்றில் இருந்த ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு சாதமாக விசாரணை அறிக்கை மாற வேண்டும் என்ற நோக்கில்தான் நாகாஜோதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புகார் கொடுத்தவர் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு செல்ல தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”