சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை மார்ச் 4ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்வதாகப் பதியப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி சமூபத்தில் உத்தரவிட்டார்.
அமலக்காத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது நீதிபதி டி.வி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 4ம் தேதிக்குள் செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“