கோவை நவஇந்தியா அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தை முடித்து வருகின்ற 12-ம் தேதி இரண்டு நாட்கள் திமுக பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.
அதில் 10 தொகுதிகளிலும் உள்ள அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். கோவை மாவட்ட திமுக அலுவலகம் நகர் பகுதியில் சிறிய அளவில் அமைந்துள்ளது. எனவே, புதிய அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்ற கழக நிர்வாகிகளின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தற்போது அவிநாசி சாலையில் புதிய மாவட்ட அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தற்பொழுது டிசைன்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
வருகின்ற 23ஆம் தேதி மாலை தமிழக முதல்வர் கோவை வரவுள்ளார். மறுதினம் காலை கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொண்டு, 82,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அங்கு மாற்று கட்சியினர் புதிய உறுப்பினர் என ஐம்பதாயிரம் பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளனர். அப்பொழுது அங்கு வந்து பாருங்கள் யாரெல்லாம் மேடையில் இருக்கிறார்கள் யாரெல்லாம் மேடையின் முன்பு இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.
செய்தி: ரஹ்மான், கோவை
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"