Advertisment

4 ஆடு வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி ரூ.5 லட்சம் வாட்ச் வாங்கினார்? செந்தில் பாலாஜி கேள்வி

வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிடுவாரா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
Dec 18, 2022 16:15 IST
4 ஆடு வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி ரூ.5 லட்சம் வாட்ச் வாங்கினார்? செந்தில் பாலாஜி கேள்வி

வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிடுவாரா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜியும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சமூக ஊடகங்களில் மோதிக் கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது.

அண்மையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் கட்டியிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. அதைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் தி.மு.க-வினர் அந்த ரஃபேல் வாட்ச் 5 லட்சம் ரூபாய் என்றும் 4 ஆடுகள் மட்டுமே வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் வாங்கினார் என்று கேள்வி எழுப்பி விமர்சித்தனர்.

இந்த நிலையில், வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிடுவாரா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?

வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல எக்செல் சீட் (excel sheet) ஏமாத்து வேலை தான் வருமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பவதாவது: “தி.மு.க-வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப்

போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? ” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலையின் பதில் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது: “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in Indiaவா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த

ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Annamalai #Bjp #V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment