சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். அவரிடம் இருந்த மின்சாரத் துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமியிடம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபுறம், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“