/tamil-ie/media/media_files/uploads/2022/12/Senthil-Balaji-MaSu.jpg)
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி கலந்து கொண்டனர்.
இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மாநகர மேயர் மாநகர ஆணையாளர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
வெள்ளை அங்கி அணிவித்தல் நிகழ்ச்சிக்கு பிறகு முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கூறியதாவது:
“தினமும் 3000 முதல் 5000 பேர் வரை புறநயாளிகள் கோவை அரசு மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் 5 பணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வார்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற மருத்துவ காரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சை அரங்கு, விபத்து மருத்துவ காரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிடி ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு 19 வகையான கட்டிடப் பணிகள் மற்றும் மருத்துவ உபகரண பணிகள் நிறைவுற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாண்டாஸ் புயல் தொடர்பாக முதல்வர் தீர்மானங்கள் எடுத்துள்ளார். புயலால் இன்று நாளை சென்னையில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குழந்தைகளுக்கான மருத்துவ குறைவு இருந்தால் சரி செய்யப்படும்” என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். அவரிடம், புயல் பாதிக்க கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை மின்சார வாரியத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கபட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள இரண்டு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.