scorecardresearch

தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இன்று வரை 65.80 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

New website address for Aadhaar electricity number link has been announced

இதுவரை தமிழகத்தில் 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோருக்கு குறுஞ்செய்தியை அனுப்பி ஆதாரை இணைக்க அறிவுறுத்தி வருகிறது. மேலும், மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மிரட்டும் மாண்டஸ் புயல்; தமிழகத்திற்கு ரெட் அலர்ட்; எங்கே கரையைக் கடக்கும்?

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று வரை 65.80 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.01 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 65.80 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Senthil balaji says till now 65 80 lakhs eb connections linked with aadhar