செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் உள்ள உண்மைத் தொகையை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீதிபதி எஸ்.அல்லி இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“