செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவுத் தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்காமல் உள்ளனர். அவருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.
ஆனால் தமிழக அரசு வழக்கு பதியாமல் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்குகளில் ஆளுநர் ரவி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அவர் அனுமதி அளித்தால் விசாரணை செய்ய முடியும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை நீதிபதிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி அள்ளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க பதில் அளித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“