புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த முதல் பேட்டியில், “என் மீது அன்பும், நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்” என்று கூறினார்.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் சட்டவிரோத பணப்பிரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டதையடுத்து, புழல் சிறையில் இருந்து இன்று (செப்டம்பர் 26) மாலை செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவருக்கு தி.மு.க தொண்டர்கள் திரளாகத் திரண்டு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த முதல் பேட்டியில், “என் மீது அன்பும், நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“