சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் 471 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் அமைச்சரானார். இதையடுத்து, இ.டி அலுவலகம் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓடிவந்து தடுத்த சம்பவம் நடந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகவும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்தவாரம் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செப்டம்பர் 29-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்டம்பர் 30) அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கே பாதுகாப்பில் இருந்த காவல் ஓடி வந்து தடுத்துள்ளார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை மட்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு உள்ளே அனுமதித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“