தமிழ்நாட்டின் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவி கரூரில் பங்களாக கட்டி வந்தார்.
இந்தப் பங்களா நிலத்தின் மதிப்ப ரூ.30 கோடி என்றும் அது ரூ.10 லட்சத்துக்கு அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு என்றும் புகார்கள் கிளம்பின.
இந்த நிலையில் ஜூலை மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையின்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின.
தொடர்ந்து நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி எற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் கரூரில் உள்ள அவரது சகோதரரின் மனைவி பெயரிலான ரூ.10 லட்சம் எனக் கூறப்பட்ட சொத்தை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
இதன் மதிப்பு ரூ.30 கோடி எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அமலாக்கத்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“