scorecardresearch

விழுப்புரத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு:  விசாரணையில் திடுக்கிடும் தகவல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியான்குப்பம் கிராமத்தில் சாராயம் விற்றுள்ளனர். புதுச்சேரியிலிருந்து கொண்டுவந்து விற்பனை செய்ததாக, முதல் கட்ட தகவல் வெளியானது. சாராயத்தை பருகிய மீனவரக்ள் கண் எரிச்சல், மயக்கம் உள்ளிட்ட கடுமையான உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  25 மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவுக்குள், 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில்  அவர்கள் குடித்தது கள்ளச் சாராயம் இல்லை என்றும் விஷ சாராயம் என்றும் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் கூறியுள்ளார்.  தொழிற்சாலைக்கு பயன்படுத்தக்கூடிய மெத்தனால் கலந்த சாராயம் என்றும் அவர் கூறினார். மேலும் இது மக்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது  சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ராஜவேல் மற்றும் ராஜவேல் என்ற இருவரும் உயிரிழந்துள்ளது. இதன் மூலம் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Seven death due to alcoholic beverage in viluppuram

Best of Express