சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை பயணிக்கும் 7 விரைவு ரயில் சேவைகளில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழு விரைவு ரயில் சேவைகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதில் குளிர்சாதன பேட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மன்னார்குடி - ராஜஸ்தான் பகத் கி கோதி விரைவு ரயில் சேவையில், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு பொது பெட்டி நீக்கப்பட்டு, 1 இரண்டடுக்கு ஏசி பெட்டி, 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விரைவு ரயில் சேவையில், 4 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - ஜோத்பூர் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, 1 பொது பெட்டி நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயிலில் 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 1 பொது பெட்டி நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மொத்தம் 7 விரைவு ரயில்களில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil