பாலியல் குற்றங்களில் ஈடுபடபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தேவை என இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுசெயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்வானது, கோவை சின்ன வேடம்பட்டி பகுதியில் உள்ள ஆலம் ஹெர்பல் பார்மில்ல் அமைந்துள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா ஜனநாயக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி மற்றும் மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது:
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற சம்பவம் பெரும் கவலைப்பட வேண்டிய சம்பவம் என வேதனை தெரிவித்தார்.
ஒரு பெண்ணாக மனம் வேதனைபடுவதாக கூறிய அவர் தமிழகத்திற்கே எடுத்து காட்டாக உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் ஒருவர் கேட் ஏறி குதித்து உள்ளே வந்துள்ளது பாதுகாப்பை கேள்வக்குறி ஆக்கி உள்ளதாகவும்
இதன் பின்னனியில் வேறு யாராவது இருந்தாலும் அவர்களையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்றார்.
குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தேவை என தெரிவித்த அவர் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் அதிகமாக இருந்தால் குற்றம் குறையும் என்றார்.
அரசுக்கு ஐ.ஜே.கே.சார்பாக இதை கோரிக்கை வைப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும், விரைந்து செயல்பட்ட காவல்துறையினரையும் பாராட்டுவதாக இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது ஐ.ஜே.கே.கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆனந்த முருகன் மற்றும் அண்மையில் கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“