பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார்.. ஆலங்குளத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி பாதிரியாரை தொடர்ந்து, பெண்களிடம் கன்னியக்குறைவாக நடந்த மற்றொரு பாதிரியார் போலீசில் சிக்கியுள்ளார்.

Sex case registered against Alankulam Pastor Stanley
ஆலங்குளம் பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருப்பவர் ஸ்டான்லி குமார். 49 வயதான இவர் கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரன்கோணத்தை சேர்ந்தவர்.
இவர் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், சிறப்பு ஜெபம் எனக் கூறி தனது மகளிடம் அத்துமீறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிரியார் மீது மற்றொரு பெண் அளித்துள்ள புகாரில் தன்னுடைய குளியல் புகைப்படத்தை வைத்து மிரட்டுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்லி குமார் மீது மேலும் சில புகார்கள் எழும் எனக் கூறப்படுகிறது. இவரது லேப்-டாப்பில் மேலும் சில வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் புகார் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பெண்களிடம் கன்னியக்குறைவாக நடத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கிடையில் தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் பாதிரியார் ஸ்டான்லி மிரட்டியுள்ளார்.

நேற்று கன்னியாகுமரி பாதிரியார் ஆன்றோ, பெண்கள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் எனபது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sex case registered against alankulam pastor stanley

Exit mobile version