சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஆஜாராக சென்ற குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அதன்படி சென்னையில் 12 வயது சிறுமிக்கு 17 பேர்க் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 17 பேரை பிடித்து சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் கூறியிருப்பது மன வளர்ச்சியற்ற அந்த சிறுமியால் தனக்கு நேர்ந்ததை விளக்க முடியவில்லை என்றும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் மூலமே இந்த துயரம் தெரியவந்ததாகவும் கூறி இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-3.jpeg)
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 பேரை 15 நாள் சிறையில் அடைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/ragul.jpeg)
1.முருகேஷ் - வயது 54
குடியிருப்பு தனியார் பாதுகாவலர் பணி செய்பவர்
2. பரமசிவம் - வயது 60
லிப்ட் ஆபரேட்டர்
3.ரவிக்குமார் - வயது 66
லிப்ட் ஆபரேட்டர்
4.ஜெய்கணேஷ் - வயது 23
பிளம்பர்
5.பாபு - வயது 36
லிப்ட் ஆபரேட்டர்
(ஓட்டேரி)
6.பழனி - வயது 40
தனியார் பாதுகாவலர்
7.தீன தயாளன் - வயது 50
லிப்ட் ஆபரேட்டர்.
8.அபிஷேக் - வயது 23
தனியார் பாதுகாவலர்
9.சுகுமாரன் - வயது 60
தனியார் பாதுகாவலர்
10. இறால் பிராஷ் - வயது 58
தனியார் பாதுகாவலர்
11. ராஜா - வயது 32
பிளம்பர்
12. சூரியா - வயது 23
பிளம்பர்
13. சுரேஷ் - வயது 32
பிளாம்பர் இரண்டு மாதத்திற்கு முன் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
14. ஜெயராமன் - வயது 26
எலக்ட்ரிஷன் இரண்டு வருடத்திற்கு முன்பு பணியில் இருந்து நின்றுவிட்டார்.
15. ராஜசேகர் - வயது 40
அவுஸ் கீப்பிங்
16. குணசேகர் - வயது 55
கார்டன் வேலை
17. சீனிவாசன் - வயது 45
லிப்ட் மேன்
18. உமாபதி - வயது 42
தனியார் பாதுகாவலர்
கைது செய்யப்பட்டவர்கள் சென்னை சைதாப்பேட்டை மகிளா நீதிமன்ற நீதிபதிகள குடியிருப்பில் நீதிபதி சரீதா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை கண்டு நேரில் பார்த்த வழக்கறிஞர்கள் கோபத்தில் அவர்களை சரமாரியாக தாக்கினர்.