ஒட்டன்சத்திரம் அருகே பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
அப்போது, அம்மாபட்டி, கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் மாணிக்கம்(37) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், மாணிக்கத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்