அமைதியாக இருந்தால் கல்லூரி படிப்பை முடித்து விடலாம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்

பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை
திருவண்ணாமலை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை பேராசிரியரும், பெண் வார்டன்களும் பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு மிரட்டல் விடுக்கும் பேராசிரியர்கள்:

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது. இந்த கல்லூரி விடுதியில் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கிப்படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை சமர்பிக்கச் சென்ற அம்மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கபாண்டியன், ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உதவி விடுதி கண்காணிப்பாளர் புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் மாணவியின் புகாரை கண்டுகொள்ளாத விடுதி உதவி கண்காணிப்பாளர் புனிதா, கல்லூரி விடுதி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்றும், மாணவிகள் தான் பொறுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உதவி பேராசிரியர் சொல்படி கேட்டால் பெரிய ஆளாகி விடலாம் என்று கூறியதுடன், உதவி பேராசிரியருக்காக மாணவியிடம் இவர்களும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்களாம். பொறுமையிழந்த மாணவி, சென்னையில் உள்ள தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

பின்பு மாணவி, தனது தந்தையுடன் சேர்ந்து, கல்லூரியில் தனக்கு நேர்ந்ததைக் குறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மாணவி கொடுத்த புகாரில் விடுதி கண்காணிப்பாளர் பேராசியர் தங்கபாண்டியன், மற்றும் கண்காணிப்பாளர் புனிதா ஆகியோர் தொடர்ந்து தவறான பாதைக்கு அழைத்ததாகவும், தனது படிப்பை பாதியில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

மாணவி கூறிய அனைத்து புகாரையும் கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. மாணவி தவறான தகவகை பரபரப்புவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கல்லூரி விடுதி காப்பாளர்களான மைதிலி மற்றும் பேராசிரியை புனிதா கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sexual harassment for college student

Exit mobile version