சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(28). மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார். இவர் பூந்தமல்லியில் உள்ள நர்சிங் பாலிடெக்னிக்கில் படிக்கும் 16 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். விசாரணையில் வெங்கடேசனின் தங்கை படிக்கும் நர்சிங் பாலிடெக்னிக்கில் சிறுமி படித்து வந்ததாகவும், தோழியின் வீட்டிற்கு சென்றபோது திருமணம் செய்து கொள்வதாக வெங்கடேசன் ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடேசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது.
/indian-express-tamil/media/media_files/2025/01/19/IaoKqUrpSFh114CUuZe7.jpeg)
இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.