Advertisment

மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்ட ஞானசேகரன்; எப்போது அழைத்தாலும் சந்திக்க கூறி மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்ட குற்றவாளி ஞானசேகரன்; அழைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டும் என மிரட்டியுள்ளார் – காவல்துறை

author-image
WebDesk
New Update
anna university

Arun Janardhanan

Advertisment

திங்கள்கிழமை இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை கல்லூரி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலையோர பிரியாணி விற்பனையாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கட்சியான தி.மு.க உடன் தொடர்பு இருப்பதாக சில தலைவர்கள் கூறி வரும் நிலையில், ஆளும் தி.மு.க மீது எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தலைமை வகித்தன. குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான ஞானசேகரனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தி.மு.க மறுத்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: After sexually assaulting Chennai university student, roadside vendor took her number, threatened her to keep meeting him

போலீசாரின் கூற்றுப்படி, திங்கட்கிழமை இரவு 8 மணியளவில், 180 ஏக்கர் வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisment
Advertisement

“ஞானசேகரன் மாணவர்களிடம் சென்று, அவர்களை வீடியோ எடுத்ததாகக் கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர் ஆண் நண்பரை அடித்து விரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் பதிவு செய்த குற்றத்திற்கான ஆதாரங்களுடன் அவரது செல்போனை மீட்டுள்ளோம். அவர் இதுபோன்று செய்த வேறு குற்றங்களும் ஆதாரங்களும் நீக்கப்பட்டு விட்டதா என்பதைக் கண்டறிய நாங்கள் இப்போது செல்போனை ஆராய்ந்து வருகிறோம்,” என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாணவி செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையைத் தொடர்புகொண்டு, பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கான பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு மூலம் புகார் அளித்தார். பாரதிய நியாய சந்ஹிதா பிரிவு 64ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்க 4 குழுக்களை அமைத்தனர்.

போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்து ஞானசேகரனை சந்தேக நபர் என அடையாளம் கண்டனர்.

ஞானசேகரன் கடந்த காலங்களில் சிறிய திருட்டு மற்றும் கொள்ளை உட்பட குறைந்தது 13 சிறு குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

"ஞானசேகரன் பாதிக்கப்பட்ட மாணவியின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அவர் எப்போது அழைத்தாலும் அவரை சந்திக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்," என்று ஒரு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

உயர் பாதுகாப்பு மிகுந்த ராஜ்பவன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி அருகே அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சம்பவம் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.

வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன, மேலும் ஊழியர்களுக்கான முகத்தை அடையாளம் காணும் மேம்பட்ட வருகை அமைப்புகள் உள்ளன, ஆனால் வெளியாட்களின் நுழைவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லை.

பல்கலைக்கழகப் பதிவாளர் ஜே.பிரகாஷ் கூறுகையில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். “கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதையெல்லாம் மீறி இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாமல் தி.மு.க அரசு திணறி வருவதாக குறிப்பிட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சமூக வலைதளப் பதிவில், சென்னையின் மையப்பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற குற்றம் நடந்திருப்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை நான் சுட்டிக்காட்டும்போதெல்லாம், எனது அறிக்கைகளை எதிர்ப்பதில் மட்டுமே மாநில அரசு முனைப்பாக இருந்தது. உடனடியாக செயல்பட்டிருந்தால், இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்,'' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''தமிழகம், தி.மு.க., ஆட்சியில், சட்ட விரோத செயல்களின் விளைநிலமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக ஆளும் நிர்வாகத்தால் காவல்துறை மும்முரமாக இருப்பதால், மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,” என்றார்.

”அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் நிலை குறித்து மக்களிடம் எடுத்துரைத்து அவர் வகித்து வரும் இலாகாவுக்கு நீதியை நிலை நாட்ட முதல்வர் இப்போதாவது பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுக்கிறது,” என்றும் அண்ணாமலை கூறினார்.

குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தி.மு.க உடன் தொடர்பு இருப்பதாக கூறி, குற்றம்சாட்டப்பட்டவர் தி.மு.க மூத்த தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் அண்ணாமலை வெளியிட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் மூத்த அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளூர் தி.மு.க தலைவருடன் நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் அவர் கட்சியின் கட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என்றும் கூறினார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார். “ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவம் நிகழும்போதும், ஆளும் அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தாமல் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறது. தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சரியான நேரத்தில் தி.மு.க அரசை தண்டிப்பார்கள்,'' என்று ராமதாஸ் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், “சாதாரண கட்சிக்காரர் கூட இல்லை” என்று சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கூறினார். ஐந்து-ஆறு மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தது காவல்துறையின் விரைவான நடவடிக்கையைக் காட்டுகிறது என்றும், எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் ரகுபதி கூறினார்.

அரசின் நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆதரித்தார். “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க முயல்பவர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகளை (அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததை) மறந்துவிடக் கூடாது,'' என்று கோவி செழியன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment