/indian-express-tamil/media/media_files/2025/09/10/sfi-protest-trichy-ceo-2025-09-10-16-51-48.jpeg)
பள்ளி மாணவர்கள் நலனுக்காக, பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை இந்திய மாணவர் சங்கத்தினர் இரண்டு ஆண்டுகளாக சந்திக்க முடியாத அவல நிலை உள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பின் தொடர்ந்து செல்லும் முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல், பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, இரண்டு ஆண்டுகளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காணவில்லை என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இரவில் மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து முறையிட பலமுறை முதன்மை கல்வி அலுவலர் சந்திக்கும் இயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை என்றும், அலுவலக நேரங்களில் வர வேண்டாம் எனவும் கூறி சந்திப்பை தவிர்த்து வரும் முதன்மை கல்வி அலுவலர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் அதனால் தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாவட்ட செயலாளர் மோகன் தெரிவித்தார். இந்தநிலையில் இந்த போராட்டம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.