Advertisment

பல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையம் நிறுவனர் சங்கர் தற்கொலை

author-image
WebDesk
Oct 12, 2018 09:25 IST
shankar ias acedemy, சங்கர் ஐ.ஏ.எஸ்

shankar ias acedemy founder commits suicide, சங்கர் ஐ.ஏ.எஸ் நிறுவனர் தற்கொலை

சுமார் 800க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

சென்னை அண்ணாநகர் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகேடமி மிகவும் பிரபலம் வாய்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் படித்து பயிற்சி எடுத்த நூற்றுக்கணக்கானோர் இன்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வெற்றியுடன் வலம் வருகின்றனர். மேலும் பலர் நல்ல அரசு வேலைகள் கிடைத்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக சங்கர் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தற்கொலை :

இத்தகைய வெற்றியாளர்களை உருவாக்கிய சங்கர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மயிலாபூரில் வசித்து வந்தார். இந்நிலையில்குடும்பத்தில் நடந்த தகராறு காரணமாக, மனைவியும் குழந்தைகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது சங்கரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணம் அவரிடம் பயிற்சி பெற்ற, பயிற்சி மேற்கொண்டு வரும் பல மாணவர்களிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

#Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment