Advertisment

சந்தை கடும் சரிவு: கரடி ஆட்டம்!

இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 வியாழக்கிழமை (அக்.26) அமர்வை நஷ்டத்தில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 264.90 புள்ளிகள் அல்லது 1.39% சரிந்து 18,857.25 ஆக காணப்பட்டது.

Share Market News Today: இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (அக்.26) வர்த்தக அமர்வை நஷ்டத்தில் நிறைவ செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 264.90 புள்ளிகள் அல்லது 1.39% சரிந்து 18,857.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 900.91 புள்ளிகள் அல்லது 1.41% குறைந்து 63,148.15 ஆகவும் இருந்தது.

Advertisment

மிட்கேப் பங்குகள் நஷ்டத்தில் காணப்பட்டன. வங்கி நிஃப்டி குறியீடு 551.85 புள்ளிகள் அல்லது 1.29% சரிந்து 42,280.15 ஆக இருந்தது.
ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீசஸ், மெட்டல், பிரைவேட் பேங்க் மற்றும் ரியாலிட்டி ஆகியவை நஷ்டத்தில் முன்னணியில் காணப்பட்டன. இதனால், மற்ற துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன. ஏற்ற இறக்கக் குறியீடு (இந்தியா விக்ஸ்) 3.69% உயர்ந்தது.

ஏசிசி சிமெண்ட் காலாண்டு முடிவுகள்

ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின. அந்த வகையில், சிமெண்ட் தயாரிப்பாளரின் வரிக்குப் பிந்தைய லாபம் 3.84 பில்லியன் ரூபாயாக ($46.16 மில்லியன்) இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment