மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை, சசிகலா 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து, ஜெயலலிதாவின் மருத்துவர்கள், அரசியல் ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டது. சம்மன் அனுப்பிய அனைவரும் நேரில் ஆஜராகி ஜெ. மரணம் தொடர்பான தங்கள் தரப்பு வாக்குமூலத்தை அளித்தனர்.
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில், ஜெ.மரணம் தொடர்பான விசாரணையில், சிலர் சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் வழங்கிருப்பதினால், அவர் ஆணையத்தில், நேராகவோ, வக்கீல் மூலமாகவோ ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பிரமாண பத்திரம் மூலமாகவோ, வாக்குமூலத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த அனைவரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மனு மீதான விசாரணையில், நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
“இதுவரை 26 பேர், ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், மருத்துவர்கள் சிவக்குமார், பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை முடிக்கப்படவில்லை, இவர்களை தவிர்த்து மற்ற 23 பேர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்துக் கொள்ளலாம். குறுக்கு விசாரணை செய்ய 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த உத்தரவு வெளியான, 7 நாட்களுக்குள் சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் வேண்டும்.” என்றும் உத்ரவிடப்பட்டது.
அனைத்து தரப்பு சாட்சிகளும் தங்களின் வாக்குமூலத்தை அளித்த பின்பு சசிகலா பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுப்பட்டது. இதற்கு நீதிபதி ஆறுமுகசாமி உரிய விளக்கத்தை அளித்தார். அதில், ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போலான வீடியோ, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பு டிடிவி தினகரன் ஆதரவாளர் மூலம் வெளியாகியது. இதுக்குறித்து காவல் நிலையத்தில், ஆணையம் அளித்த புகார் நிலுவையில் உள்ளது. எனவே, சசிகலாவிற்கு உண்மையாகவே, பொறுப்பு மற்றும் அக்கறை இருந்திருந்தால், அந்த வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கலாம். ( தனது உறவினரான டிடிவி தினகரனுக்கு சசிகலா வீடியோ அளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.)
இதுப்போன்ற பல்வேறு காரணங்களால், சசிகலா விசாரணை ஆணையத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும், விசாரணையை மேலும், காலதாமதம் படுத்துவதாக கருதப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பு சாட்சிகளும் தங்களின் வாக்குமூலத்தை அளித்த பின்பு சசிகலா பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார். அதன் புன்பு, விசாரணை முடிக்கப்பட்ட 22 பேரின் வாக்குமூலங்களை விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு தபால் மூலம் பெங்களூர் சிறைக்கு அனுப்பி வைத்தது. சசிகலா தரப்பு வழங்கறிஞர்களுக்கும் நகல் வழங்கப்பட்டது.
23 சாட்சிகளிடமும் 15 நாட்களுக்கு பின்னர் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்க ஆணையம் அனுமதித்து இருப்பதால் அடுத்தகட்ட விசாரணை அனைத்தையும் 15 நாட்களுக்கு நீதிபது ஆறுமுகசாமி ஒத்திவைத்தார்.