கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சேகர் பாபு, “ கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான்.
இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனினும், சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம்” என்றார். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகள் பெறுதில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் இடையேயும் போட்டி நிலவுகிறது.
அதாவது, 100 கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“