/indian-express-tamil/media/media_files/2025/03/25/yc1eAE43OV21CfrZ6jdt.jpg)
புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60.
கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளரான ஹுசைனி, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் பாக்சிங் கோச்சராக நடித்திருந்தார். மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் தான் முதலில் அறிமுகமானார். அது போல் பத்ரி படத்தில் விஜய்க்கு பாக்சிங் சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார். 60 வயதான இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தான் ஒருநாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட 2 பாட்டில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்ற நிலையில், மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் ஹுசைனி. மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாகவும் கூறிய அவர், மேலும் தனது நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகான் ஹூசைனி மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.