Advertisment

குஷ்பு குறித்து அவதூறு; தி.மு.க.வில் இருந்து நீக்கம்: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

பாரதிய ஜனதா நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Shivaji Krishnamurthy was permanently expelled from the DMK

திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தர நீக்கம்

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி அண்மையில், பாரதிய ஜனதா நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக, கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

Advertisment

இந்த வீடியோ மற்றும் ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக பேட்டியளித்த குஷ்பு, “திமுகவில் கருணாநிதிக்கு பிறகு கண்ணியம் இல்லை.

இவர்கள் பெண்களை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அவமானப்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, திமுக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுனர் ஆர்.என். ரவி குறித்து பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியது.

தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினர். இதன்பிறகு தனது செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இணைந்தார்.
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Tn Bjp Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment